கண்மணி அன்போட….ஒரு காதல் மடல்

கண்மணி அன்போட….காதலன் நான்..உன்னை பார்த்து எவ்வளவு நாளாச்சு? கிட்டத்தட்ட ஒரு மாசம்… நீ இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல.. உன்னை பார்த்த அன்னைக்கு நான் படுகிற சந்தோஷத்துக்கு அளவே இல்லை! உன்னை பார்த்த முதல் வாரம்.. உன்னொட நினைவுகளிலே சுகமா ஒடுது.. அதுக்கு அப்புறம்.. எப்படி சொல்லுவேன்.. ஒவ்வொரு நாளும் போராட்டம்.. மறுபடி எப்பொ உன்னை பார்ப்போம் ணு மனசு தவிக்குது…மரங்கள் அசய மறந்தாலும் காற்று விடுவதில்லை மாதிரி.. நானே உன்னை மறந்தாலும் நான் பார்க்கிற ஒவ்வொரு பொருளும் உன்னைத் தான் நினைவு படுத்துது…என்னை மாதிரி ஜென்மத்துகெல்லாம் நீயே கண்கண்ட தெய்வம்…

போன வாரத்திலே இருந்து ஒவ்வொரு நாளா என்னிட்டு இருந்தேன்.. 7 நாள் 6 நாள் 5 நாள்.. நாளைக்குத் தான் உன்னை பார்ப்போம் ணு இருந்தேன்.. நானே எதிர் பார்க்காம வந்த வங்கி விடுமுறை உன்னையும் என்னையும் ஒரு நாள் முன்னாடியே சேர்த்து விட்டது! வாழ்க Sep 30!

உன்னைக் கண்ட இந்த நாள் ஒரு இனிய நாள்!

PS:
Salary credited :D

4 Responses to “கண்மணி அன்போட….ஒரு காதல் மடல்”

  1. curdriceaurora Says:

    idhellaam konjam overaa theriile.

    good one though

  2. prabukarthik Says:

    theriyave illai :)
    enakku irukara cholesterol ku idhellam sadharanam

    Thanks :)

  3. curdriceaurora Says:

    the only tamizh script i can read is the Sun TV scroll font because that is what I learnt from. Reading this article actually took me a good 6-7 minutes and at the end of it kadinnu therinjappo romba kaduppa irundhadhu :P.

  4. prabukarthik Says:

    curdrice

    thappu illai :)

Leave a Reply