Disclaimer to “Gyaan on Investing” in Tamil
Wednesday, July 6th, 2005(please check comments for thangleesh version and have 50% reduced fun)
உடன்பிறப்பே,
இங்கு நமது அருமைத் தம்பி பி. கா அவர்கள் முதலீடு சம்பந்தமாக ஒரு சிறப்பான வலைப்பதிவினை தந்துள்ளார். அவருக்கு நமது தமிழ் மக்கள், என் பேரன்களை போல செல்வத்தோடு, செல்வாக்கோடு வாழ வேண்டுமென அவா.
இன்னிலையில் ஒரு கயவர் கூட்டம் அவர் மேல் சேற்றை வாரி இரைக்கத் துடிக்கிறதென்று அறிந்து மனம் துடித்தேன், தூக்கமின்றித் தவித்தேன்.
தம்பி பி. கா ஒரு ஊழல் பேர்வழியாம்.பங்கு சந்தையை தன் கைபிடிக்குள் கொண்டு வரும் பொருட்டு இப்படி பொய் அறிவுரைகளை சொல்கிறாராம்!
இவர்களை என்னவென்பது?
தமிழர் வரலாறு அரியாதவர்கள். உயர் ஜாதி வெறியர்கள். என்னைப்போல் பகுத்தறிவு பாசறையில் இருந்து வந்தவர்கள் இல்லை என்பது மட்டும் திண்ணம்.
தம்பி பி. கா அவர்களை தொலைபேசியில் ஏக வசனத்தில் வசை மாறி பொழிந்தபடி பல அழைப்புகள் வருகின்றன. இங்கே என்ன மக்கள் ஆட்சி நடக்கின்றதா? இல்லை. இது காட்டுமிராண்டி ஆட்சி. இவர்களுக்கு மக்கள் வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
சிலர் தொலைபேசியில் அழைக்கின்றனர், யார்? என்ன வென்றே தெரிவதில்லை.
தொலைபேசியை எடுத்தவுடன் “அடேய், உன்னால் தானடா, உன் பேச்சை கேட்டு தானடா பங்கு சந்தையில் ஒரு லட்சம் இழந்தேன், உன்னை சும்மா விட மாட்டேன்” என்று மிரட்டுகின்றனர்.
இங்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதை சாக்காக வைத்து சிலருக்கு தம்பி இல்லத்திற்கு ஆட்டோவில் அடியாட்களை அனுப்பும் எண்ணமிருப்பதை நான் நன்கு அறிவேன். அது வெறும் பகல் கனவு. தம்பி பி.கா திராவிட பாரம்பரியத்தில் வந்தவர். தமிழர் பெருமை அறிந்தவர். அவர் இதற்கெல்லாம் அஞ்சி நடுங்கும் கோழை அல்ல.
இதை எதிர்த்து அறவழியில் போராடுவார். போராட்ட தேதி விரைவில் ‘முரசொலி’யில் வரும். அதே நேரம், இவர் மீது பழி விழ வேண்டுமென்றே சில சமோக விரோத சக்திகள் இவர் எதிரிகள் மீது பாய்ந்தால் அதற்கு அருமைத் தம்பி பி. கா பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
Makkale,
Enna yedhunnu kozhambi poyirupeengannu ninaikiren. onnum illai. investment pathi post pottomillaya, edhukkum irukatumnu oru disclaimer podalaamnu thonichu. summa irundhirkalam. Namma DMK thalaivar Kalaignar - periya pechalar, eluthalar ache,
avar kitte ketkalam nu thonichu. naan avar kitte poi,”ayya, idhai padichuttu readers pannara investment ukku ellam naan porrupu illangara madhiri oru chinna disclaimer kudunga” nu kaeteen. avlo dhaan. avaru stylea ishtathukku kadhai thiraikadhai vasanam ellam eludhitaar.
yaarum rombo feel aga vendaamnu kettukkolgiren.
idhellam summa lulaayikkku (btw idhu nija disclaimer:)